புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு குறித்து தகவல் கிடைத்தும் அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய பெண்ணின் வர்ண புகைப்படம் கிடைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது சஜித் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இது தொடர்பில் ஜனாதிபதியும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்களும் இதில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.
தேசிய பாதுகாப்பு குறித்து தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை; சபையில் சஜித் குற்றச்சாட்டு. புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு குறித்து தகவல் கிடைத்தும் அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய பெண்ணின் வர்ண புகைப்படம் கிடைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.இது தொடர்பாக பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இதன்போது சஜித் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இது தொடர்பில் ஜனாதிபதியும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.அதேவேளை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்களும் இதில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.