• May 17 2024

சஜித் அணியுடன் இணையும் அரச தரப்பு எம்.பிக்கள்: எமக்கு வெற்றி நிச்சயம்- எதிர்க்கட்சி உறுதி!

Sharmi / Dec 31st 2022, 7:15 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர் அரசாங்கத்திலுள்ள 10 உறுப்பினர்கள் எம்முடன் இணைவர். அதன் பின்னர் அரசாங்கம் அதன் பெரும்பான்மையை இழக்கும். 2023 இல் இது நிச்சயம் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்றையதினம் (30) இரண்டாவது நாளாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக எல்லை நிர்ணய குழு, இளைஞர் பிரதிநிதித்துவம், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற காரணிகளை முன்வைத்து காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தற்போது நிதி இல்லை என்ற புதிய காரணம் கூறப்படுகிறது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் , 2020 பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட மக்கள் ஆணை தற்போது நீங்கியுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தேர்தல் செலவுகளுக்கான நிதியை வழங்குவதற்கு சர்வதேச அமைப்புக்கள் முன்வந்துள்ளது.

தேர்தல் முடிவுகளை எண்ணியே அரசாங்கம் அதற்கு அஞ்சுகிறது. பொதுஜன பெரமுனவை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் விடுதலை முன்னணிக்கு சுமார் 5 இலட்சம் வாக்குகள் மாத்திரமே காணப்படுகின்றன. எனவே இனிவரும் தேர்தல்கள் ஐக்கிய மக்கள் சக்தி இலகுவாக வெற்றி பெறப்போகும் தேர்தல்களாகும்.

தற்போது அரசாங்கத்திலுள்ள 10 உறுப்பினர்கள் விலகிச் சென்றால் , பெரும்பான்மை இலக்கப்படும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்ற பின்னர் , அந்த 10 பேரும் எம்முடன் இணைவர். அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் தேர்தல்களில் வெற்றி பெறும் என்றார்

சஜித் அணியுடன் இணையும் அரச தரப்பு எம்.பிக்கள்: எமக்கு வெற்றி நிச்சயம்- எதிர்க்கட்சி உறுதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றதன் பின்னர் அரசாங்கத்திலுள்ள 10 உறுப்பினர்கள் எம்முடன் இணைவர். அதன் பின்னர் அரசாங்கம் அதன் பெரும்பான்மையை இழக்கும். 2023 இல் இது நிச்சயம் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்றையதினம் (30) இரண்டாவது நாளாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக எல்லை நிர்ணய குழு, இளைஞர் பிரதிநிதித்துவம், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற காரணிகளை முன்வைத்து காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தற்போது நிதி இல்லை என்ற புதிய காரணம் கூறப்படுகிறது.ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் , 2020 பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட மக்கள் ஆணை தற்போது நீங்கியுள்ளது.இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தேர்தல் செலவுகளுக்கான நிதியை வழங்குவதற்கு சர்வதேச அமைப்புக்கள் முன்வந்துள்ளது.தேர்தல் முடிவுகளை எண்ணியே அரசாங்கம் அதற்கு அஞ்சுகிறது. பொதுஜன பெரமுனவை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் விடுதலை முன்னணிக்கு சுமார் 5 இலட்சம் வாக்குகள் மாத்திரமே காணப்படுகின்றன. எனவே இனிவரும் தேர்தல்கள் ஐக்கிய மக்கள் சக்தி இலகுவாக வெற்றி பெறப்போகும் தேர்தல்களாகும்.தற்போது அரசாங்கத்திலுள்ள 10 உறுப்பினர்கள் விலகிச் சென்றால் , பெரும்பான்மை இலக்கப்படும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற்ற பின்னர் , அந்த 10 பேரும் எம்முடன் இணைவர். அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயம் தேர்தல்களில் வெற்றி பெறும் என்றார்

Advertisement

Advertisement

Advertisement