அரசாங்கத்துக்கு 675 கிலோ கிராம் நெல் தொகை இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தங்களால் திறக்கக் கூடிய அனைத்து நெல் களஞ்சியசாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
14 சதவீதம் ஈரலிப்புள்ள நெல்லையே அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துவருகிறது. பாரியளவான நெல் வயல்களில் இதுவரையில் அறுவடைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
தற்போது 675 கிலோ கிராம் அளவு நெல் தொகை நெல் சந்தைப்படுத்தல் சபைக்குக் கிடைத்துள்ள போதிலும், தங்களுக்குக் கிடைத்துள்ள மொத்த நெல்லாக இதனைக் கருதமுடியாது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பயிரிடப்படாத காணிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச களஞ்சியசாலைகளுக்கு இதுவரை மொத்த நெல் கிடைக்கவில்லை - நெல் சந்தைப்படுத்தல் சபை அரசாங்கத்துக்கு 675 கிலோ கிராம் நெல் தொகை இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தங்களால் திறக்கக் கூடிய அனைத்து நெல் களஞ்சியசாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 14 சதவீதம் ஈரலிப்புள்ள நெல்லையே அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்துவருகிறது. பாரியளவான நெல் வயல்களில் இதுவரையில் அறுவடைகள் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது 675 கிலோ கிராம் அளவு நெல் தொகை நெல் சந்தைப்படுத்தல் சபைக்குக் கிடைத்துள்ள போதிலும், தங்களுக்குக் கிடைத்துள்ள மொத்த நெல்லாக இதனைக் கருதமுடியாது என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் பயிரிடப்படாத காணிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.