• Nov 28 2024

மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசின் புதிய திட்டம்!

Chithra / Feb 21st 2024, 10:58 am
image

  

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதே பகுதியில் 100 மெகாவோட் காற்றாலைத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய காற்றாலை 50 மெகாவோட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசின் புதிய திட்டம்   மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.அதே பகுதியில் 100 மெகாவோட் காற்றாலைத்திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புதிய காற்றாலை 50 மெகாவோட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement