• May 03 2024

யாழில் பாடசாலை மாணவர்களும் சோறு கொடுத்த ஆளுநர்

harsha / Dec 12th 2022, 4:30 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் செங்குந்தா பாடசாலையில், மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்தார்.

புலம் பெயர்ந்த ஒருங்கிணைந்த அமைப்பின் விஸ்வநாதன் தலைமையில், செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கான 10 இலட்சம் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளனர்.இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கப்படவுள்ளது.

குறித்த திட்டதின் ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

 நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட, யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கன நிதி அனுசரணையை வழங்கினார்கள்.

முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேலும் குறித்த  திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்காக புலம்பெயர் வாழும் குளோபல் அசோசியேசன் பங்குதாரர்களான தர்மலிங்கம், சண்முகதாஸ், சூரிய குமாரன் சதீஷ்குமார் ராஜலிங்கம் ராஜகுமாரன் ஆகியோரின் அனுசரணையுடன் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை பாடசாலை அதிபரிடம் ஆளுநரால் கையளிக்கப்பட்டது.


யாழில் பாடசாலை மாணவர்களும் சோறு கொடுத்த ஆளுநர் யாழ்ப்பாணம் செங்குந்தா பாடசாலையில், மாணவர்களுக்கான மதிய சத்துணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைத்தார்.புலம் பெயர்ந்த ஒருங்கிணைந்த அமைப்பின் விஸ்வநாதன் தலைமையில், செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கான 10 இலட்சம் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளனர்.இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கப்படவுள்ளது.குறித்த திட்டதின் ஆரம்ப நிகழ்வுகள் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட, யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் வடமாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த திட்டத்துக்கன நிதி அனுசரணையை வழங்கினார்கள்.முதற்கட்டமாக பாடசாலையின் வங்கி கணக்கில் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியினை வட மாகாண ஆளுநரின் பெயரில் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.மேலும் குறித்த  திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்துவதற்காக புலம்பெயர் வாழும் குளோபல் அசோசியேசன் பங்குதாரர்களான தர்மலிங்கம், சண்முகதாஸ், சூரிய குமாரன் சதீஷ்குமார் ராஜலிங்கம் ராஜகுமாரன் ஆகியோரின் அனுசரணையுடன் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை பாடசாலை அதிபரிடம் ஆளுநரால் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement