• Nov 21 2024

பிரான்ஸில் திருவள்ளுவர் உருவச்சிலையை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர்!

Chithra / Dec 12th 2023, 3:16 pm
image

 

பிரான்ஸில் திருவள்ளுவர் உருவச்சிலையை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார்.

திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வு வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ் செர்ஜி நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ஜீன்ஸ்டன், இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸிற்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப்,தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக தலைவர் அயலக கல்வி டாக்டர் குறிஞ்சி வேந்தன், பிரான்ஸ் நாட்டின் அரசியல், கலாச்சார, இலக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த அரசியல், கலாச்சார, இலக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.


பிரான்ஸில் திருவள்ளுவர் உருவச்சிலையை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர்  பிரான்ஸில் திருவள்ளுவர் உருவச்சிலையை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார்.திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்துள்ளார்.இந்நிகழ்வு வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸ் செர்ஜி நகரில் இடம்பெற்றுள்ளது.இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ஜீன்ஸ்டன், இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் அமைச்சர் லக்ஷ்மி நாராயணன், பிரான்ஸிற்கான இந்திய தூதுவர் ஜவீட் அஷ்ரப்,தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக தலைவர் அயலக கல்வி டாக்டர் குறிஞ்சி வேந்தன், பிரான்ஸ் நாட்டின் அரசியல், கலாச்சார, இலக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த அரசியல், கலாச்சார, இலக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement