• Feb 08 2025

'GovPay' வசதியை அறிமுகப்படுத்தியது அரசாங்கம் இன்று முதல் ஆரம்பம்

Thansita / Feb 7th 2025, 10:43 am
image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக்  கொண்டு செல்ல அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று  ஜனாதிபதி  தலைமையில் நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் அனைத்து  விதமான கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் 'GovPay' வசதியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 

 பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில்

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் திட்டத்தை  நனவாக்கி இந்த புதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறோம். நிதியை  அடிப்படையாகக் கொண்டு கொடுப்பனவுகள் ஊழல் மோசடிகள் அதிகரிக்க்கவும் கொடுக்கல் , வாங்கல் முறையின் வினைத்திறனற்ற நிலைக்கு காரணமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி  அந்த சவால்களுக்கு முகம்கொடுக்க அதனத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். மேலும் 

'இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் .எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

'GovPay' வசதியை அறிமுகப்படுத்தியது அரசாங்கம் இன்று முதல் ஆரம்பம் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக்  கொண்டு செல்ல அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் ஆரம்பகட்ட நிகழ்வு இன்று  ஜனாதிபதி  தலைமையில் நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் அனைத்து  விதமான கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் 'GovPay' வசதியை நடைமுறைப்படுத்துவதன் மூலம்  பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில்டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் திட்டத்தை  நனவாக்கி இந்த புதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறோம். நிதியை  அடிப்படையாகக் கொண்டு கொடுப்பனவுகள் ஊழல் மோசடிகள் அதிகரிக்க்கவும் கொடுக்கல் , வாங்கல் முறையின் வினைத்திறனற்ற நிலைக்கு காரணமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டி  அந்த சவால்களுக்கு முகம்கொடுக்க அதனத்து அரச கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்க்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். மேலும் 'இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் .எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement