• Dec 01 2024

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் - அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Chithra / Dec 1st 2024, 8:41 am
image


நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லாஃப் நிறுவனம், எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டியேற்படும்.

லிட்ரோ எரிவாயு கையிருப்பு போதுமானதாக இருப்பதால், லாப் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண எரிவாயு கொள்கலன்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.

அதன்படி, லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.

பிரதான நிரப்பு முனையத்தின் இருப்பிடமான மாபிமாவைச் சுற்றியுள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் அம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பலில் தாமதம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக எரிவாயு விநியோகிக்க முடியவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் - அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.லாஃப் நிறுவனம், எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டியேற்படும்.லிட்ரோ எரிவாயு கையிருப்பு போதுமானதாக இருப்பதால், லாப் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண எரிவாயு கொள்கலன்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.அதன்படி, லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.பிரதான நிரப்பு முனையத்தின் இருப்பிடமான மாபிமாவைச் சுற்றியுள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பலில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிவாயு விநியோகிக்க முடியவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement