• May 02 2024

கனடாவில் இலங்கையருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்..! samugammedia

Chithra / Jun 23rd 2023, 6:31 am
image

Advertisement

கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை (இலங்கை மதிப்பில் 8,17,07,73,131) பரிசாக வென்றெடுத்துள்ளார்.

கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜாக்பொட்டி பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.

மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் கார் கொள்வனவு செய்யவும், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் தாம் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்தளாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.   


கனடாவில் இலங்கையருக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம். samugammedia கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை (இலங்கை மதிப்பில் 8,17,07,73,131) பரிசாக வென்றெடுத்துள்ளார்.கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.ஜாக்பொட்டி பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாகவும் கார் கொள்வனவு செய்யவும், பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் தாம் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்த உள்தளாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement