• Sep 20 2024

பசுமை இயக்கத்தின் 'இராசபோசனம்' சிறுதானியப் பொங்கல் விழா!

Sharmi / Jan 17th 2023, 2:11 pm
image

Advertisement

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது. இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை (16.01.2023) மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் 'பயன் அறிந்து உண்க' என்ற நூலும் வெளியிடப்பட்டது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி ச.முகுந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் சோ. பத்மநாதன் பங்கேற்றிருந்தார். 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த சிறுதானியங்களை மீளவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்கனவே இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சிறுதானியங்களை மீளவும் முடிசூட்டுவோம் என்ற கருப்பொருளில் அமைந்த இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் இலவசமாக வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாகவே இம்முறை பொங்கல் விழாவை சாமை அரிசியில் பொங்கிச் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடியுள்ளது. 

கலை நிகழ்ச்சிகளும் பாராம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்த இப்பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.




பசுமை இயக்கத்தின் 'இராசபோசனம்' சிறுதானியப் பொங்கல் விழா தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொங்கல் விழாவை இம்முறை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொண்டாடியுள்ளது. இராசபோசனம் என்ற பெயரில் இப்பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை (16.01.2023) மல்லாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்லாரை வளர்பிறை முன்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் கலாநிதி பாலசிவகடாட்சத்தின் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் 'பயன் அறிந்து உண்க' என்ற நூலும் வெளியிடப்பட்டது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி ச.முகுந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராகக் கவிஞர் சோ. பத்மநாதன் பங்கேற்றிருந்தார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தமிழ் மக்களின் பண்டைய உணவுப் பண்பாட்டில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த சிறுதானியங்களை மீளவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏற்கனவே இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சிறுதானியங்களை மீளவும் முடிசூட்டுவோம் என்ற கருப்பொருளில் அமைந்த இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் இலவசமாக வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இம்முறை பொங்கல் விழாவை சாமை அரிசியில் பொங்கிச் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடியுள்ளது. கலை நிகழ்ச்சிகளும் பாராம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்த இப்பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement