• May 17 2024

திருமண மேடையில் மாலை மாற்றும்போது உயிரிழந்த மணமகன்! அதிர்ச்சி சம்பவம் SamugamMedia

Chithra / Mar 4th 2023, 8:56 am
image

Advertisement

இந்திய மாநிலம் பீகாரில் திருமண நிகழ்வில் அதீத இரைச்சல் ஒலித்ததால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா கிராமத்தில் திருமண நிகழ்வு நடந்தது. குதிரை ஊர்வலம் என கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில், இளைஞர்கள் சிலர் அதீத சத்தத்தில் இசையை ஒலிக்கவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால், மணமகன் சுரேந்திர குமார் இதனால் பாதிக்கப்பட்டார். அவர் சத்தத்தை குறைக்குமாறு கூறினார். எனினும் அங்கிருந்தவர்கள் அதனை செய்யவில்லை. அதன் பின்னர் மணமக்கள் மாலைமாற்றிக் கொண்டனர்.

அப்போது மணமகளின் கழுத்தில் சுரேந்திர குமார் மாலை அணிவித்தவுடன் மேடையில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதீத இரைச்சலால் தான் மணமகன் இறந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.        

திருமண மேடையில் மாலை மாற்றும்போது உயிரிழந்த மணமகன் அதிர்ச்சி சம்பவம் SamugamMedia இந்திய மாநிலம் பீகாரில் திருமண நிகழ்வில் அதீத இரைச்சல் ஒலித்ததால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா கிராமத்தில் திருமண நிகழ்வு நடந்தது. குதிரை ஊர்வலம் என கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில், இளைஞர்கள் சிலர் அதீத சத்தத்தில் இசையை ஒலிக்கவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர்.ஆனால், மணமகன் சுரேந்திர குமார் இதனால் பாதிக்கப்பட்டார். அவர் சத்தத்தை குறைக்குமாறு கூறினார். எனினும் அங்கிருந்தவர்கள் அதனை செய்யவில்லை. அதன் பின்னர் மணமக்கள் மாலைமாற்றிக் கொண்டனர்.அப்போது மணமகளின் கழுத்தில் சுரேந்திர குமார் மாலை அணிவித்தவுடன் மேடையில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதீத இரைச்சலால் தான் மணமகன் இறந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.        

Advertisement

Advertisement

Advertisement