• Sep 19 2024

இந்தியாவில் வேகமாக பரவும் எச்3என்2 வகை காய்ச்சல்: இருவர் உயிரிழப்பு- 90 பேர் பாதிப்பு ! SamugamMedia

Tamil nila / Mar 10th 2023, 5:53 pm
image

Advertisement

எச்3என்2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 90 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.


இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. 


அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் வேகமாக பரவும் எச்3என்2 வகை காய்ச்சல்: இருவர் உயிரிழப்பு- 90 பேர் பாதிப்பு SamugamMedia எச்3என்2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 90 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement