அமெரிக்காவில் ஹண்டா வைரஸ் பாதித்து 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அரிசோனா, கலிபோர்னியா மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது எலியின் எச்சில் மற்றும் கழிவுகளால் ஹண்டா வைரஸ் பரவுவதாக கூறப்படுகின்றது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி, வாந்தி ஆகியவை ஏற்படும் என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனை ஏற்பட்டு மரணம் கூட நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஹண்டா வைரசுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில் எலிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறினர்.
அமெரிக்காவில் ஹண்டா வைரஸ் அச்சுறுத்தல் – 4 பேர் பலி அமெரிக்காவில் ஹண்டா வைரஸ் பாதித்து 4 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் அரிசோனா, கலிபோர்னியா மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதாவது எலியின் எச்சில் மற்றும் கழிவுகளால் ஹண்டா வைரஸ் பரவுவதாக கூறப்படுகின்றது.இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி, வாந்தி ஆகியவை ஏற்படும் என்றும் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனை ஏற்பட்டு மரணம் கூட நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.மேலும் ஹண்டா வைரசுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில் எலிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறினர்.