• Apr 28 2024

முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Dec 21st 2023, 10:20 am
image

Advertisement

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முச்சக்கரவண்டி போக்குவரத்து கட்டணங்கள் மாறுபட்ட நிலையில் அறவிடப்படுவதாக  மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் முறைமையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

அந்தவகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள செயலி ஊடாக நாடு முழுவதும் ஒரே அளவிலான முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அறவிடுவது தொடர்பாகவும் போக்குவரத்து அமைச்சு ஆலோசித்து வருகின்றது.

அதேவேளை ஒரு லீற்றர் பெற்றோல் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்போது, முச்சக்கரவண்டிச் சாரதிகள் ஒரு கிலோமீற்றருக்கு 300 ரூபா அறவிடுவது நியாயமற்றது என்றும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாடு முழுவதும் ஒரே அளவிலான முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் மக்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.


முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.samugammedia நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முச்சக்கரவண்டி போக்குவரத்து கட்டணங்கள் மாறுபட்ட நிலையில் அறவிடப்படுவதாக  மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் முறைமையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்தவகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள செயலி ஊடாக நாடு முழுவதும் ஒரே அளவிலான முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அறவிடுவது தொடர்பாகவும் போக்குவரத்து அமைச்சு ஆலோசித்து வருகின்றது.அதேவேளை ஒரு லீற்றர் பெற்றோல் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்போது, முச்சக்கரவண்டிச் சாரதிகள் ஒரு கிலோமீற்றருக்கு 300 ரூபா அறவிடுவது நியாயமற்றது என்றும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை நாடு முழுவதும் ஒரே அளவிலான முச்சக்கர வண்டிக் கட்டணங்களை அறவிடுவது தொடர்பில் மக்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement