• Sep 19 2024

யாழ். மாவட்டத்தில் இம்முறை 2463 புதிய வாக்காளர்கள் - அரச அதிபர் தெரிவிப்பு!

Chithra / Sep 3rd 2024, 11:26 am
image

Advertisement


யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் புதிய வாக்காளர்களாக 2ஆயிரத்து 463 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பதில்  அரச அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.

 யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் நியாயமான தேர்தலாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. 

 வாக்காளர் அட்டைகள் பிரதம  தபால் அலுவலகத்துக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றிலிருந்து வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ் மதிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்களிப்பு எண்ணும்  14 நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் உரிய காலப்பகுதியில் தங்கள் பிரதேச தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இம்முறை 2463 புதிய வாக்காளர்கள் - அரச அதிபர் தெரிவிப்பு யாழ். மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் புதிய வாக்காளர்களாக 2ஆயிரத்து 463 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பதில்  அரச அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் நியாயமான தேர்தலாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.  வாக்காளர் அட்டைகள் பிரதம  தபால் அலுவலகத்துக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றிலிருந்து வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ் மதிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்களிப்பு எண்ணும்  14 நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் உரிய காலப்பகுதியில் தங்கள் பிரதேச தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement