யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் ஐந்தாம் வருட நிறைவு விழா நிகழ்வுகள் இன்று கொண்டாடப்பட்டது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்டதையோட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன்பத்திரன, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மருத்துவ சங்கத் தலைவர் சுதர்சன், அரச மருத்துவ சங்கத்தின் உப தலைவர் சத்திர சிகிச்சை நிபுணர் எஸ் மதிவாணன்,வைத்திய நிபுணர்கள், தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் மற்றும் தாதியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தெரிவிக்கையில்
தற்போது யாழ்ப்பாண போதன வைத்தியசாலையானது தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வைத்தியசாலை தொடர்பில் பல்வேறுபட்ட குற்றசாசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலையை கோயிலைப் போல் பயன்படுத்த வேண்டும். இவை பொது மக்களுக்கு சேவை வழங்கும் ஓர் இடமென்பதை அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் பணிப்பாளர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் ஐந்தாம் வருட நிறைவு விழா யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் ஐந்தாம் வருட நிறைவு விழா நிகழ்வுகள் இன்று கொண்டாடப்பட்டது.விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்டதையோட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.குறித்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன்பத்திரன, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மருத்துவ சங்கத் தலைவர் சுதர்சன், அரச மருத்துவ சங்கத்தின் உப தலைவர் சத்திர சிகிச்சை நிபுணர் எஸ் மதிவாணன்,வைத்திய நிபுணர்கள், தாதிய பயிற்சி கல்லூரி அதிபர் மற்றும் தாதியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது உரையாற்றிய யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தெரிவிக்கையில் தற்போது யாழ்ப்பாண போதன வைத்தியசாலையானது தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வைத்தியசாலை தொடர்பில் பல்வேறுபட்ட குற்றசாசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.வைத்தியசாலையை கோயிலைப் போல் பயன்படுத்த வேண்டும். இவை பொது மக்களுக்கு சேவை வழங்கும் ஓர் இடமென்பதை அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் பணிப்பாளர் இதன் போது சுட்டிக்காட்டினார்.