• Apr 14 2025

யாழ். கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! இருவர் காயம்

Chithra / Jan 28th 2025, 8:03 am
image

  

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ளதால் மீனவர்கள் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இருவர் காயம்   யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது.இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ளதால் மீனவர்கள் பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement