• May 20 2024

யாழ். மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் - காத்திருந்த மாணவர்களுக்கு குளிர்பானம் samugammedia

Chithra / Mar 30th 2023, 11:14 am
image

Advertisement

யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுக்கு 10 நிமிடங்கள் தாமதித்து வந்ததற்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காத்திருந்த மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நேற்று புதன்கிழமை யாழ் மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டார்.

குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சரை வரவேற்பதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வீதியில் நின்றனர்.

எனினும் முழங்காவிலில் இடம்பெற்ற பாடசாலை ஒன்றில் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பத்து நிமிடங்கள் தாமதமாக குறித்த நிகழ்வுக்கு வருகை தந்தார்.


இந்நிலையில் பிரதம விருந்தினர் உரையை ஆற்றும் போது தனது வருகைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தாமதித்து வருகை தந்ததற்கு மன்னிப்பும் கோரினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எப்போதும் நேர முகாமைத்துவத்தை சரியாகப் பேண வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவன்.

ஆகவே மாணவர்கள் எந்தச் செயற்பாடுகளிலும்  நேர முகாமைத்துவத்தை உரிய முறையில் பேண வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு குளிப்பானம் வழங்குவதற்கு பணித்துள்ளேன்.- என்றார்.


யாழ். மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் - காத்திருந்த மாணவர்களுக்கு குளிர்பானம் samugammedia யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுக்கு 10 நிமிடங்கள் தாமதித்து வந்ததற்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காத்திருந்த மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கினார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,நேற்று புதன்கிழமை யாழ் மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டார்.குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சரை வரவேற்பதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் வீதியில் நின்றனர்.எனினும் முழங்காவிலில் இடம்பெற்ற பாடசாலை ஒன்றில் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பத்து நிமிடங்கள் தாமதமாக குறித்த நிகழ்வுக்கு வருகை தந்தார்.இந்நிலையில் பிரதம விருந்தினர் உரையை ஆற்றும் போது தனது வருகைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தாமதித்து வருகை தந்ததற்கு மன்னிப்பும் கோரினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எப்போதும் நேர முகாமைத்துவத்தை சரியாகப் பேண வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவன்.ஆகவே மாணவர்கள் எந்தச் செயற்பாடுகளிலும்  நேர முகாமைத்துவத்தை உரிய முறையில் பேண வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்காகக் காத்திருந்த மாணவர்களுக்கு குளிப்பானம் வழங்குவதற்கு பணித்துள்ளேன்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement