• May 17 2024

யாழ். மக்களுக்கு யுத்தத்தின் பின் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு..! அமைச்சர் விசேட அழைப்பு samugammedia

Chithra / Jul 14th 2023, 2:53 pm
image

Advertisement

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசாங்கத்தில் நாட்டை முன்னேற்றும் பயணத்தில் அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படும் திட்டத்தின் காரணமாகவே இந்த glocal fair திட்டத்த நாம் யாழில் ஆரம்பித்தோம்.

கட்சி, மதங்களை மறந்து யாழ் மக்கள் அனைவரையும் நாம் இந்த கண்காட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் தொழில் அமைச்சின் கீழான சகல திணைக்களங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்தியவங்கி என்பவற்றின் சேவைகள் அனைத்து ஓர் இடத்தில் ஒருமித்துளையால் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். 

இந்த கண்காட்சி வேலைத்திட்டத்தில் ஆலோசனை சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்புக்கு வந்து தீர்த்துகொள்ளகூடிய சில பிரச்சினைகளை யாழிலே தீர்க்க சில வழிநடப்புக்களை இங்கு பெற முடியும்.

விசேடமாக சர்வதேச வேலைதிட்டங்களை பற்றி அறியும் வாய்ப்பு யாழ். மக்களுக்கு கிடைத்துள்ளது. 

யுத்தத்தின் பின் இதுவே முதல் தடவையாக யாழில் இவ்வாறானதொறு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்தார்


யாழ். மக்களுக்கு யுத்தத்தின் பின் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு. அமைச்சர் விசேட அழைப்பு samugammedia இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“புதிய அரசாங்கத்தில் நாட்டை முன்னேற்றும் பயணத்தில் அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படும் திட்டத்தின் காரணமாகவே இந்த glocal fair திட்டத்த நாம் யாழில் ஆரம்பித்தோம்.கட்சி, மதங்களை மறந்து யாழ் மக்கள் அனைவரையும் நாம் இந்த கண்காட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.இதில் தொழில் அமைச்சின் கீழான சகல திணைக்களங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்தியவங்கி என்பவற்றின் சேவைகள் அனைத்து ஓர் இடத்தில் ஒருமித்துளையால் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இந்த கண்காட்சி வேலைத்திட்டத்தில் ஆலோசனை சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.கொழும்புக்கு வந்து தீர்த்துகொள்ளகூடிய சில பிரச்சினைகளை யாழிலே தீர்க்க சில வழிநடப்புக்களை இங்கு பெற முடியும்.விசேடமாக சர்வதேச வேலைதிட்டங்களை பற்றி அறியும் வாய்ப்பு யாழ். மக்களுக்கு கிடைத்துள்ளது. யுத்தத்தின் பின் இதுவே முதல் தடவையாக யாழில் இவ்வாறானதொறு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement