ஹட்டன் - அவிசாவளை பிரதான வீதியில் கினிகத்தேன கோவிலுக்கருகில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு பாதையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாகன சாரதிகள் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஒரு வளைவில் இந்த நிலம் தாழ் இறக்கியுள்ளதாகவும், ஏறக்குறைய ஓராண்டாக அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தினசரி பஸ் உள்ளிட்ட கனரக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாரிய சேதத்தை ஏற்படுத்தும் முன், நிலம் தாழ்வு ஏற்பட்டுள்ள பகுதியை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாழிறங்கிய ஹட்டன் - அவிசாவளை பிரதான வீதி. சாரதிகள் விடுத்த கோரிக்கை. ஹட்டன் - அவிசாவளை பிரதான வீதியில் கினிகத்தேன கோவிலுக்கருகில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு பாதையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக வாகன சாரதிகள் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.ஒரு வளைவில் இந்த நிலம் தாழ் இறக்கியுள்ளதாகவும், ஏறக்குறைய ஓராண்டாக அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தினசரி பஸ் உள்ளிட்ட கனரக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், பாரிய சேதத்தை ஏற்படுத்தும் முன், நிலம் தாழ்வு ஏற்பட்டுள்ள பகுதியை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.