• Dec 08 2024

திருமலையில் புகையிரதத்துடன் மோதிய ஹயஸ் வாகனம்- மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி..!

Sharmi / Oct 14th 2024, 9:50 am
image

திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று (14) காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புகையிரதம் வருவதைக் கண்ட வாகன சாரதி வாகனத்திலிருந்து இறங்கி ஓடிய நிலையில் வாகனச் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

எனினும், குறித்த  வாகனம் புகையிரதத்துடன் மோதுண்டு பலத்த  சேதமடைந்துள்ளது.

குறித்த ரயில் கடவையில் எவரும் கடமையில் இல்லாத காரணத்தினால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



திருமலையில் புகையிரதத்துடன் மோதிய ஹயஸ் வாகனம்- மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி. திருகோணமலை பாலையூற்று பகுதியில் இன்று (14) காலை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.புகையிரதம் வருவதைக் கண்ட வாகன சாரதி வாகனத்திலிருந்து இறங்கி ஓடிய நிலையில் வாகனச் சாரதி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.எனினும், குறித்த  வாகனம் புகையிரதத்துடன் மோதுண்டு பலத்த  சேதமடைந்துள்ளது.குறித்த ரயில் கடவையில் எவரும் கடமையில் இல்லாத காரணத்தினால் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement