தாம் ஒருபோதும் மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி எவரும் கையகப்படுத்தாத நாட்டை அனைத்து மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் தாம் கையகப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்பாறை பொத்துவில் ஜலால்தீன் விளையாட்டரங்கில் நேற்றையதினம் (23) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாம் இருந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஒற்றை ஆசனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்ததாகவும், நாட்டைப் பொறுப்பேற்று மக்களை அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறைகளில் இருந்து மீட்க பாடுபட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தாம் ஒருபோதும் மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் செய்யவில்லை- ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு. தாம் ஒருபோதும் மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி எவரும் கையகப்படுத்தாத நாட்டை அனைத்து மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் தாம் கையகப்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.அம்பாறை பொத்துவில் ஜலால்தீன் விளையாட்டரங்கில் நேற்றையதினம் (23) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.தாம் இருந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஒற்றை ஆசனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்ததாகவும், நாட்டைப் பொறுப்பேற்று மக்களை அவர்கள் அனுபவித்து வரும் அடக்குமுறைகளில் இருந்து மீட்க பாடுபட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.