• Mar 18 2025

சுகாதார துறையினரின் தொழிற்சங்க நடவடிக்கை: வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு..!

Sharmi / Mar 18th 2025, 2:25 pm
image

நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையிலும் வவுனியாவிலும் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக வவுனியாவில் பொது வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிகொல்லாவ, பதவியா, உட்பட தூர இடங்களில் இருந்து வரும் 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் உட்பட மொத்தமாக 1000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சுகாதார துறையினரின் தொழிற்சங்க நடவடிக்கை: வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு. நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையிலும் வவுனியாவிலும் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன் காரணமாக வவுனியாவில் பொது வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிகொல்லாவ, பதவியா, உட்பட தூர இடங்களில் இருந்து வரும் 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் உட்பட மொத்தமாக 1000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement