• Nov 24 2024

மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்..! இன்று வெடிக்கவுள்ள போராட்டம்

Chithra / Jan 30th 2024, 10:18 am
image

 

தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில் நடைபெறவில்லை என சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பை சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள், இடைநிலை வைத்திய ஊழியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்தார்.


மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள். இன்று வெடிக்கவுள்ள போராட்டம்  தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில் நடைபெறவில்லை என சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக கொழும்பை சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள், இடைநிலை வைத்திய ஊழியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement