• Feb 25 2025

வாட்டிவதைக்கப்போகும் வெப்பம் - 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Thansita / Feb 24th 2025, 10:14 pm
image

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அதிக வெப்பநிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாளைய தினம 9 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.  

வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வெப்பநிலை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவிலான நீரை அருந்து வதோடு மக்கள் வயல் நிலங்களில் வேலை செய்யும் போது அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வாட்டிவதைக்கப்போகும் வெப்பம் - 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அதிக வெப்பநிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில் நாளைய தினம 9 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.  வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வெப்பநிலை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிகளவிலான நீரை அருந்து வதோடு மக்கள் வயல் நிலங்களில் வேலை செய்யும் போது அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement