• May 04 2024

ரஷ்ய படைகளுக்கெதிராக உக்ரைனின் முக்கிய நகரில் கடும் சமர்: மக்களின் நிலை கவலைக்கிடம்!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 10:42 am
image

Advertisement

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முன்னெடுத்து வரும்  இராணுவ நடவடிக்கை ஒருவருடத்தை கடந்த நிலையிலும் முடிவில்லாமல் நீண்டு வருகின்றது.


இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அந்த வரிசையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக ரஷ்யா கடுமையாக சண்டையிட்டு வருகின்றது.



அந்த நகரை நாலாபுறமும் சுற்றிவளைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் தற்போது நகருக்குள் நுழைந்து விட்டன.


அவர்கள் நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் உக்ரைன் வீரர்களுடன் வீதிகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

ரஷ்ய படைகளின் இடைவிடாத தாக்குதல்களில் பாக்முத் நகரம் நிலைகுலைந்துள்ளது.

அங்கு வாழும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதுகாப்பு முகாம்களில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.


தாக்குதல்கள் தீவிரமாக இருந்தாலும் பாக்முத் நகரம் இன்னும் ரஷ்ய படைகளின் கைகளுக்கு செல்லவில்லை என அந்த நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.



ரஷ்ய படைகளுக்கெதிராக உக்ரைனின் முக்கிய நகரில் கடும் சமர்: மக்களின் நிலை கவலைக்கிடம்SamugamMedia உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முன்னெடுத்து வரும்  இராணுவ நடவடிக்கை ஒருவருடத்தை கடந்த நிலையிலும் முடிவில்லாமல் நீண்டு வருகின்றது. இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக ரஷ்யா கடுமையாக சண்டையிட்டு வருகின்றது. அந்த நகரை நாலாபுறமும் சுற்றிவளைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள் தற்போது நகருக்குள் நுழைந்து விட்டன. அவர்கள் நகரத்தை கைப்பற்றும் முனைப்பில் உக்ரைன் வீரர்களுடன் வீதிகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர். ரஷ்ய படைகளின் இடைவிடாத தாக்குதல்களில் பாக்முத் நகரம் நிலைகுலைந்துள்ளது. அங்கு வாழும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதுகாப்பு முகாம்களில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். தாக்குதல்கள் தீவிரமாக இருந்தாலும் பாக்முத் நகரம் இன்னும் ரஷ்ய படைகளின் கைகளுக்கு செல்லவில்லை என அந்த நகரின் மேயர் அலெக்சாண்டர் மார்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement