நாட்டின் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான இடமாக எஹலியகொட பதிவாகியுள்ளது.
இதன்படி, எஹலியகொட பகுதியில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இங்கிரிய – ஹல்வத்துர பகுதியில் 348.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, அவிசாவளையின் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் அவிசாவளை – கொஸ்கொடவிற்கு இடைப்பட்ட பகுதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
எஹலியகொடயில் கடும் மழை - கொழும்புக்கான போக்குவரத்து முற்றாக தடை நாட்டின் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான இடமாக எஹலியகொட பதிவாகியுள்ளது.இதன்படி, எஹலியகொட பகுதியில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் 427.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், இங்கிரிய – ஹல்வத்துர பகுதியில் 348.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இதேவேளை, அவிசாவளையின் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் அவிசாவளை – கொஸ்கொடவிற்கு இடைப்பட்ட பகுதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.