• Nov 25 2024

முல்லையில் கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம்..!

Sharmi / Nov 25th 2024, 11:50 am
image

முல்லைத்தீவு பரந்தன் A-35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல்  பாலத்தினை  மூடி  மழை வெள்ளநீர்  பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும்  மக்கள்  சிரமத்தினை எதிர்கொள்வதோடு விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. 

இதனால், நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம்  உயர்ந்து  பாலத்தினை  மூடியதுடன் நீர்  பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகள் சரியாக தெரியாமலிருக்கின்றது.

பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

இதனால்  வீதி எது கடல் எது என தெரியாத நிலையிலையே பயணிகள் பயணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. 

இதனால் வட்டு வாகல் பாலத்தின் இரு  கரையிலும் பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரையையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.




முல்லையில் கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய வட்டுவாகல் பாலம். முல்லைத்தீவு பரந்தன் A-35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல்  பாலத்தினை  மூடி  மழை வெள்ளநீர்  பாய்வதனால் போக்குவரத்தில் ஈடுபடும்  மக்கள்  சிரமத்தினை எதிர்கொள்வதோடு விபத்து ஏற்படும் சாத்தியங்கள் அதிகளவாக இருப்பதனால் பாலத்தின் இருமருங்கிலும் பொலிஸார் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால், நந்திக்கடல் நீர் மட்டம் நிரம்பியுள்ளது. இதனால் வட்டுவாகல் பாலத்தின் நீர்மட்டம்  உயர்ந்து  பாலத்தினை  மூடியதுடன் நீர்  பாய்ந்தோடாமல் தேங்கியிருக்கும் நிலை காணப்படுகின்றது.அத்தோடு பாலத்தின் அணைக்கட்டுகள் சரியாக தெரியாமலிருக்கின்றது. பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.இதனால்  வீதி எது கடல் எது என தெரியாத நிலையிலையே பயணிகள் பயணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வட்டு வாகல் பாலத்தின் இரு  கரையிலும் பொலிஸார், கடற்படையினர் பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் பாலத்தின் இரு கரையையும் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement