ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்த அனா்த்தத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
மேலும் பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை தலிபான் அரசின் தரவுகளின் படி, நேற்று (10) இரவு மாத்திரம் 62 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பாக்லான் மாகாண அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் கனமழை- 200-க்கும் மேற்பட்டோா் பலி ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்த அனா்த்தத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.மேலும் பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை தலிபான் அரசின் தரவுகளின் படி, நேற்று (10) இரவு மாத்திரம் 62 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் பாக்லான் மாகாண அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது