நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிண்ணியா பொலிஸ் நிலையம் உட்பட பல வீடுகள் காணிக்குள் என வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றும் (16) இவ் அடை மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீர் வடிந்தோடக்கூடிய வடிகான் வசதிகள் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கனமழையால் வெள்ள நீரை வெளியேற்ற பெகோ இயந்திரம் ஊடாக நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட ஜீவனோபாயமாக அன்றாடம் கூலித் தொழில் செய்யும் மக்கள் இதன் போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கிண்ணியா அண்ணல் நகர் பகுதி மக்களின் வீடு காணிகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் மீனவத் தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிதுள்ளனர்.
திருகோணமலையில் கடும் மழை - வெள்ளத்தில் மூழ்கிய கிண்ணியாவின் தாழ் நிலப்பகுதிகள்.samugammedia Srilanka News நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்ணியா பொலிஸ் நிலையம் உட்பட பல வீடுகள் காணிக்குள் என வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றும் (16) இவ் அடை மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நீர் வடிந்தோடக்கூடிய வடிகான் வசதிகள் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கனமழையால் வெள்ள நீரை வெளியேற்ற பெகோ இயந்திரம் ஊடாக நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட ஜீவனோபாயமாக அன்றாடம் கூலித் தொழில் செய்யும் மக்கள் இதன் போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.மேலும் கிண்ணியா அண்ணல் நகர் பகுதி மக்களின் வீடு காணிகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் மீனவத் தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிதுள்ளனர்.