• May 19 2024

கொட்டிதீர்க்கப்போகும் கன மழை: வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Nov 12th 2023, 7:42 am
image

Advertisement

நாளை 13 ஆம் திகதி பிற்பகல் முதல் 18 ஆம் திகதி  வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழை தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழையின் முதல் சுற்று  நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்தது.

இவ்வாண்டுக்கான வடகீழ் பருவத்தின் முதலாவது தாழமுக்கம் 13 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவில்  உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே நாளை 13 ஆம் திகதி பிற்பகல் முதல் 18 வரை வடக்கு மற்றும் கிழக்கு 

மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 14, 15, 16 நவம்பர் 2023 திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை முதல் மிகக் கனமழை   கிடைக்கும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

கொட்டிதீர்க்கப்போகும் கன மழை: வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia நாளை 13 ஆம் திகதி பிற்பகல் முதல் 18 ஆம் திகதி  வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழை தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழையின் முதல் சுற்று  நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்தது.இவ்வாண்டுக்கான வடகீழ் பருவத்தின் முதலாவது தாழமுக்கம் 13 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவில்  உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே நாளை 13 ஆம் திகதி பிற்பகல் முதல் 18 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.குறிப்பாக 14, 15, 16 நவம்பர் 2023 திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை முதல் மிகக் கனமழை   கிடைக்கும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement