• Nov 23 2024

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றும் கன மழை பெய்யும் சாத்தியம் - சற்றுமுன்னர் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..!! samugammedia

Tamil nila / Jan 11th 2024, 6:29 am
image

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை இன்றைய தினமும் தொடரும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுகளிலும் இன்றையதினம் கன மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வயல் நிலங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானை ஊடான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்திளாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த வீதியால் லொறி டிப்பர் போன்ற பெரிய வாகனங்கள் தவிர்ந்த ஏனைய சிறிய வாகனங்களில் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றும் கன மழை பெய்யும் சாத்தியம் - சற்றுமுன்னர் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை. samugammedia வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கன மழை இன்றைய தினமும் தொடரும் வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுகளிலும் இன்றையதினம் கன மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.இதனால் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வயல் நிலங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானை ஊடான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்திளாளர் தெரிவித்தார்.அத்துடன் குறித்த வீதியால் லொறி டிப்பர் போன்ற பெரிய வாகனங்கள் தவிர்ந்த ஏனைய சிறிய வாகனங்களில் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement