• Apr 19 2024

மாவீரர் குடும்பங்களுக்கு உதவி!!

crownson / Dec 16th 2022, 10:42 am
image

Advertisement

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின்  பாரியாரான அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள கௌரி அறக்கட்டளையின் ஊடாக  தீவகத்தில் வாழ்ந்து வருகின்ற முப்பது மாவீரர் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன . 

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தீவக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்  உறுப்பினர்களான  குயிலன் கோணேஷ், அ.கனகையா, கருணாகரன் குணாளன்,சிவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் . 

மேலும் இந்நிகழ்வில் க. பொ.த . சாதாரண தர பரீட்சையில்  9A  மற்றும் 5A  சித்திகளை பெற்ற வேலணை மத்திய கல்லூரியின் இரு மாணவிகளுக்கும் கல்வியை மேற்கொண்டு தொடர்வதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.

தீவக கல்வி வலயத்தில் ஒரு மாணவர் மாத்திரமே 9A சித்திகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

மாவீரர் குடும்பங்களுக்கு உதவி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின்  பாரியாரான அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள கௌரி அறக்கட்டளையின் ஊடாக  தீவகத்தில் வாழ்ந்து வருகின்ற முப்பது மாவீரர் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன . சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர்  கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்  ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தீவக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்  உறுப்பினர்களான  குயிலன் கோணேஷ், அ.கனகையா, கருணாகரன் குணாளன்,சிவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் . மேலும் இந்நிகழ்வில் க. பொ.த . சாதாரண தர பரீட்சையில்  9A  மற்றும் 5A  சித்திகளை பெற்ற வேலணை மத்திய கல்லூரியின் இரு மாணவிகளுக்கும் கல்வியை மேற்கொண்டு தொடர்வதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது. தீவக கல்வி வலயத்தில் ஒரு மாணவர் மாத்திரமே 9A சித்திகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement