• May 19 2024

உலகக் கோப்பை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் விபரம்! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 10:19 pm
image

Advertisement

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதேவேளை, 2023 ஒரு நாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 103 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்களுடன் 103 ஓட்டங்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், பெதும் நிஷங்க 20 ஓட்டங்களையும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்று இலங்கை இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.

மேலும் அயர்லாந்து தரப்பில் Mark Adair 4 விக்கெட்டுகளையும், Barry McCarthy 3 விக்கெட்டுகளையும், Gareth Delany 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, 326 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அயர்லாந்து அணி சார்பில் Curtis Campher அதிபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 5 விக்கெட்டுக்களையும் மஹீஸ் தீக்‌ஷன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

உலகக் கோப்பை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் விபரம் samugammedia 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.இதேவேளை, 2023 ஒரு நாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் சுற்றுப் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன 103 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்களுடன் 103 ஓட்டங்களை குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.சதீர சமரவிக்ரம 82 ஓட்டங்களையும், பெதும் நிஷங்க 20 ஓட்டங்களையும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும் பெற்று இலங்கை இன்னிங்ஸை வலுப்படுத்தினர்.மேலும் அயர்லாந்து தரப்பில் Mark Adair 4 விக்கெட்டுகளையும், Barry McCarthy 3 விக்கெட்டுகளையும், Gareth Delany 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.அதன்படி, 326 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.அயர்லாந்து அணி சார்பில் Curtis Campher அதிபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.இந்நிலையில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 5 விக்கெட்டுக்களையும் மஹீஸ் தீக்‌ஷன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

Advertisement

Advertisement

Advertisement