குறித்த வழக்கானது நேற்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் மார்ச் மாதம் (19) ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருட்களை தேயிலை பைகளில் நீண்டகாலமாக கடத்தி வந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கைது செய்துள்ளனர்.
இதன் போது 48 வயது மதிக்கத்தக்க கைதான குறித்த சந்தேக நபர் வசம் இருந்து தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஹெரோயின் பக்கற்றுக்கள் மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல் -சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கானது நேற்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் மார்ச் மாதம் (19) ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொருட்களை தேயிலை பைகளில் நீண்டகாலமாக கடத்தி வந்த சந்தேக நபரை அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய கைது செய்துள்ளனர்.இதன் போது 48 வயது மதிக்கத்தக்க கைதான குறித்த சந்தேக நபர் வசம் இருந்து தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஹெரோயின் பக்கற்றுக்கள் மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.