• Nov 18 2024

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Chithra / Aug 22nd 2024, 12:41 pm
image

 

திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய கூடிய விரைவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 4 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு  திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதற்கமைய கூடிய விரைவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 4 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement