• Nov 28 2024

மனுஷ மற்றும் ஹரின் தொடர்பில் உயர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு! பறிபோகும் பதவிகள்

Chithra / Aug 9th 2024, 10:41 am
image


அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். 

இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக இருவரும் நாடாளுமன்ற மற்றும் அமைச்சுப் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.


மனுஷ மற்றும் ஹரின் தொடர்பில் உயர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு பறிபோகும் பதவிகள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர். இதனையடுத்து ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக இருவரும் நாடாளுமன்ற மற்றும் அமைச்சுப் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement