போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் 11பேர் கொண்ட உயர்மட்ட குழு நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இதன்போது குறித்த குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அரசியல், பொருளாதார உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
வர்த்தகம், புதிய ஒத்துழைப்பு துறைகள், போலந்து - இலங்கை கடல் துறைமுகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உட்பட பல்வேறு துறைகள் குறித்து போலந்து வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளது.
இந்த நிலையில், போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியின் இலங்கை வருகை முக்கியமானதாகக் கருதப்படுகிறது
இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழுவினர். போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் 11பேர் கொண்ட உயர்மட்ட குழு நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.இதன்போது குறித்த குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.அரசியல், பொருளாதார உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.வர்த்தகம், புதிய ஒத்துழைப்பு துறைகள், போலந்து - இலங்கை கடல் துறைமுகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உட்பட பல்வேறு துறைகள் குறித்து போலந்து வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளது.இந்த நிலையில், போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கியின் இலங்கை வருகை முக்கியமானதாகக் கருதப்படுகிறது