• Nov 24 2024

இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழு! ஜனாதிபதி உத்தரவு

Chithra / May 16th 2024, 1:17 pm
image

 

இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இதனைக் தெரிவித்தார்.

ரஷ்யாவுக்குச் சென்றவர்களின் தகவல்களை சேகரிக்க பாதுகாப்பு அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கம் தற்போது செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய – உக்ரேன் போரில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழு ஜனாதிபதி உத்தரவு  இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இதனைக் தெரிவித்தார்.ரஷ்யாவுக்குச் சென்றவர்களின் தகவல்களை சேகரிக்க பாதுகாப்பு அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கம் தற்போது செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ரஷ்ய – உக்ரேன் போரில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement