• Nov 23 2024

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை..!

Chithra / May 22nd 2024, 12:47 pm
image

 

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது

2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

அத்தோடு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், 

ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் ஞானசார தேரரின் சில அறிக்கைகள் மற்றும் நடத்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை.  பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, இன, மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.இந்த நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அத்தோடு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனமும் ஜனாதிபதியிடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதிக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் ஞானசார தேரரின் சில அறிக்கைகள் மற்றும் நடத்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement