• May 19 2024

நிலாவில் இந்து கோயில்களை அமைக்க இந்து மகா சபா தீர்மானம்...!samugammedia

Sharmi / Aug 28th 2023, 3:31 pm
image

Advertisement

இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று இருக்கும் நிலையில் நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என இந்து மகா சபா தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய நிலவின் தென் துருவத்தின் அந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிவ் சக்தி என்று பெயர் வைத்தது அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிவிப்புக்கு பாஜகவினர், இந்துத்துவ அமைப்பினர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

அதேவேளை பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்புக்கு  எதிர்க்கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி சந்திரயான் 3 மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு குறித்து தெரிவித்து உள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது,

'ஜிஹாதி மனநிலை கொண்டவர்கள் சந்திரனுக்கு செல்லும் முன்பே, நிலாவை இந்து நாடாக அறிவித்து சிவ சக்தி முனையை அதன் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.' என்றார்


சிவ சக்தியை சிவ சக்தி தாம் ஆக நாங்கள் பார்க்கிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து மகாசபா மற்றும் சண்ட் மகாசபா சார்பில் கடிதம் எழுத உள்ளேன். நிலவுக்கு எளிதில் சென்று வரும் நிலைமை உருவானால் சிவன், பார்வதி, கணேஷுக்கு கோயில்கள் கட்ட நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.




நிலாவில் இந்து கோயில்களை அமைக்க இந்து மகா சபா தீர்மானம்.samugammedia இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்று இருக்கும் நிலையில் நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என இந்து மகா சபா தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அதேவேளை சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய நிலவின் தென் துருவத்தின் அந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிவ் சக்தி என்று பெயர் வைத்தது அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.இந்த நிலையில் குறித்த அறிவிப்புக்கு பாஜகவினர், இந்துத்துவ அமைப்பினர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அதேவேளை பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்புக்கு  எதிர்க்கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி சந்திரயான் 3 மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு குறித்து தெரிவித்து உள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது, 'ஜிஹாதி மனநிலை கொண்டவர்கள் சந்திரனுக்கு செல்லும் முன்பே, நிலாவை இந்து நாடாக அறிவித்து சிவ சக்தி முனையை அதன் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.' என்றார்சிவ சக்தியை சிவ சக்தி தாம் ஆக நாங்கள் பார்க்கிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து மகாசபா மற்றும் சண்ட் மகாசபா சார்பில் கடிதம் எழுத உள்ளேன். நிலவுக்கு எளிதில் சென்று வரும் நிலைமை உருவானால் சிவன், பார்வதி, கணேஷுக்கு கோயில்கள் கட்ட நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement