• Nov 22 2024

வெகு சிறப்பாக நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் கும்பாபிஷேகம்

Chithra / Jan 24th 2024, 3:04 pm
image

 

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ  நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தேறியது.

பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை, குதிரை என்பன வலம் வந்தன.

கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் சொரியப்பட்டது.

கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

விசேடமாக யானை, குதிரை என்பன வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


வெகு சிறப்பாக நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் கும்பாபிஷேகம்  வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ  நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தேறியது.பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை, குதிரை என்பன வலம் வந்தன.கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் சொரியப்பட்டது.கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.விசேடமாக யானை, குதிரை என்பன வரவழைக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement