இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் மொத்தம் 485 பேர் எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் 43 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 41 நிலையங்களில் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டம் அறிவித்துள்ளது.
இதற்காக www.know4sure.lk என்ற இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் மேலதிக தகவல்களுக்கு 0112 667 163, 0703 633 533 இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும், புதிய நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் தற்போது 5,496 பேர் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 4,095 பேர் ஆண்கள் என்றும் 1,391 பேர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு. 43 பேர் உயிரிழப்பு. samugammedia இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் மொத்தம் 485 பேர் எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் 43 இறப்புகளும் பதிவாகியுள்ளன.இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 41 நிலையங்களில் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டம் அறிவித்துள்ளது.இதற்காக www.know4sure.lk என்ற இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் மேலதிக தகவல்களுக்கு 0112 667 163, 0703 633 533 இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும், புதிய நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.இலங்கையில் தற்போது 5,496 பேர் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 4,095 பேர் ஆண்கள் என்றும் 1,391 பேர் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.