• May 17 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை!

Chithra / Dec 6th 2022, 4:27 pm
image

Advertisement


வரவு செலவுத்திட்டத்திற்கு பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை கிடைத்துள்ளது.

நாடாளுமன்றம் கடந்த 13ஆம் திகதி கூடிய நிலையில் இதன் பின்னர் ஜனவரி 17ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.

அதன்பிறகு, எதிர்வரும் 13 ஆம் திகதி வாய்மொழியாக கேள்விகளுக்கு பதில் அளிக்க நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரக் குழு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வரவு செலவுத்திட்டத்திற்கு பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை கிடைத்துள்ளது.நாடாளுமன்றம் கடந்த 13ஆம் திகதி கூடிய நிலையில் இதன் பின்னர் ஜனவரி 17ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது.பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெற உள்ளது.அதன்பிறகு, எதிர்வரும் 13 ஆம் திகதி வாய்மொழியாக கேள்விகளுக்கு பதில் அளிக்க நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement