புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(21) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம் , அல்காசிமி சிட்டியை சேர்ந்த சுல்தான் அப்துல் காதர் ராசிக் எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யாய , அல்காசிமி சிட்டி சந்தியில் முச்சக்கர வண்டியும், துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
புத்தளம் தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரழந்த நபரின் ஜனாஸா தொடர்பான மரண விசாரணையை புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.
புத்தளத்தில் கோர விபத்து. குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(21) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.புத்தளம் , அல்காசிமி சிட்டியை சேர்ந்த சுல்தான் அப்துல் காதர் ராசிக் எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யாய , அல்காசிமி சிட்டி சந்தியில் முச்சக்கர வண்டியும், துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.புத்தளம் தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.உயிரழந்த நபரின் ஜனாஸா தொடர்பான மரண விசாரணையை புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.