• Nov 24 2024

புத்தளத்தில் கோரவிபத்து ..!சுக்குநூறாக நொறுங்கிய மோட்டார் சைக்கிள்...!முன்னாள் இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Sharmi / Jan 5th 2024, 3:08 pm
image

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 



புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறி ,  வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு பின்னர்  பட்டா லொறியையும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பட்டாவில் சென்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


குறித்த விபத்து இன்று அதிகாலை பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முன்னாள் இராணுவ வீரரான  பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய அனுர மங்கள் குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

புத்தளத்தில் கோரவிபத்து .சுக்குநூறாக நொறுங்கிய மோட்டார் சைக்கிள்.முன்னாள் இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறி ,  வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு பின்னர்  பட்டா லொறியையும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பட்டாவில் சென்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.குறித்த விபத்து இன்று அதிகாலை பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் முன்னாள் இராணுவ வீரரான  பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய அனுர மங்கள் குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement