• Apr 06 2025

அம்பாறையில் சூட்சுமான முறையில் திருட்டு- கொள்ளைக்கூட்டம் சிக்கியது எப்படி?

Thansita / Apr 5th 2025, 12:03 pm
image

வீடு மற்றும் மாடுகள் உட்பட  வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ள சம்பசம் இடம்பெற்றுள்ளது

குறித் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் வீடுகள் உடைக்கப்பட்டும் மாடுகள் உட்பட பெறுமதியான பல பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய நேற்று அதிகாலை குறித்த கொள்ளை குழுவில் உள்ள  2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

சிசிடிவி காணோளி மற்றும் பொதுமக்களின் தகவல்களின் அடிப்படையிலே பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் சுமார் 25 வயது முதல் 28 வயது மதிக்கத்தக்கவர்களாவர்.

ஏனைய கொள்ளைச் குழுவில் உள்ள மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட கொள்ளையர் குழு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 

களவாடிச் செல்லப்பட்ட 5க்கும் அதிகமான எரிவாயு சிலின்டர்கள்  மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பல பொருட்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் சூட்சுமான முறையில் திருட்டு- கொள்ளைக்கூட்டம் சிக்கியது எப்படி வீடு மற்றும் மாடுகள் உட்பட  வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ள சம்பசம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஅம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் வீடுகள் உடைக்கப்பட்டும் மாடுகள் உட்பட பெறுமதியான பல பொருட்கள் களவாடிச் செல்லப்பட்டிருந்தன.இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய நேற்று அதிகாலை குறித்த கொள்ளை குழுவில் உள்ள  2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்சிசிடிவி காணோளி மற்றும் பொதுமக்களின் தகவல்களின் அடிப்படையிலே பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் சுமார் 25 வயது முதல் 28 வயது மதிக்கத்தக்கவர்களாவர்.ஏனைய கொள்ளைச் குழுவில் உள்ள மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.அத்துடன் கைது செய்யப்பட்ட கொள்ளையர் குழு சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து களவாடிச் செல்லப்பட்ட 5க்கும் அதிகமான எரிவாயு சிலின்டர்கள்  மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பல பொருட்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.குறித்த நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement