• Nov 25 2024

நீர்கொழும்பில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!

Tamil nila / Sep 27th 2024, 6:50 pm
image

நீர்கொழும்பு - களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றிரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்  நேற்று இரவு குறித்த பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றினை சோதனையிட்டனர்.

டிங்கி இயந்திர படகில் இருந்து 14 உரமூடைகளில் அடைக்கப்ப்பட்ட 400 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் கைவிட்டு சென்றிருக்கலாம் என  சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 400 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.


நீர்கொழும்பில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு. நீர்கொழும்பு - களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றிரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்  நேற்று இரவு குறித்த பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றினை சோதனையிட்டனர்.டிங்கி இயந்திர படகில் இருந்து 14 உரமூடைகளில் அடைக்கப்ப்பட்ட 400 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் கைவிட்டு சென்றிருக்கலாம் என  சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்ட 14 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 400 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement