முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நேற்று(14) கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில், தனது கட்சிக்காரர் இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்று வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கமைய இன்று அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மனுஷ முன்னிலை முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். மனுஷ நாணயக்காரவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நேற்று(14) கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில், தனது கட்சிக்காரர் இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்று வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிவித்திருந்தார். அதற்கமைய இன்று அவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.