• Nov 26 2024

இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

Chithra / Sep 12th 2024, 12:42 pm
image

 

இந்த வருடத்தில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை  தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளதாகவும் எண்ணிக்கை 218,350 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், இந்திய, பிரிட்டன் , ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


இலங்கைக்கு இலட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்  இந்த வருடத்தில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை  தெரிவித்துள்ளது.இதனடிப்படையில், ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,395,773 என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வந்துள்ளதாகவும் எண்ணிக்கை 218,350 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்தோடு, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 200,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்தநிலையில், இந்திய, பிரிட்டன் , ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement